*அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
கடலூர் : கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 620 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) தனலட்சுமி, ஆட்சியர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 620 மனுக்கள் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.