'மக்களுக்கு உங்களை பிடிக்கவில்லை என்றால்..' - வைரலாகும் திரிஷாவின் பதிவு

5 hours ago 3

சென்னை,

தமிழ் திரை உலகில் 22 ஆண்டுகளாக தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் திரிஷா. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் தற்போது அஜித்துடன் 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' மற்றும் கமலின் 'தக் லைப்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் 'விஸ்வம்பரா' படத்திலும், மலையாளத்தில் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில், ஆர்.ஜே.பாலாஜி நடிகர் சூர்யாவை வைத்து இயக்கி வரும் 'சூர்யா 45' படத்தில் நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் நடந்த நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண விழாவில் நடிகை திரிஷா கலந்து கொண்டார். இந்நிலையில் திரிஷா அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'மக்களுக்கு உங்களை பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. நாய்களுக்கு உங்களை பிடிக்கவில்லை என்றால்தான் கவலைப்பட வேண்டும்' என்றும் 'வயதாகும்போதுதான், சேவல்கள் ஏன் தங்கள் நாளைத் தொடங்குவதற்கு முன் கத்துகின்றன என்பது எனக்குப் புரிகிறது' என்றும் தெரிவித்துள்ளார். திரிஷா பகிர்ந்த இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Entire Article