அபர ஏகாதசி விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?

7 hours ago 4

பகவான் மகா விஷ்ணுவுக்கு மிகவும் உகந்த விரதம், ஏகாதசி விரதம் ஆகும். இந்த நாளில் விரதம் இருந்து பகவானை வழிபடுவதால் பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். குடும்பத்தில் கஷ்டங்கள் விலகும், செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம். விரதங்களில் மேன்மையான இந்த விரத நாட்கள், மாதத்திற்கு இரண்டு முறை வரும். ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தது.

அவ்வகையில் நாளை மறுநாள் (மே 23) வரும் ஏகாதசியானது, அபர ஏகாதசி என அழைக்கப்படுகிறது. அபர ஏகாதசியின் சிறப்புகள் குறித்து பகவான் கிருஷ்ணர், யுதிஷ்டிரருக்கு விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். அபர ஏகாதசி விரதத்தை யாரெல்லாம் கடைப்பிடிக்கிறார்களோ, அவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை கிருஷ்ணர் கூறியுள்ளார். இவை பிரம்மாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன் விவரம்:

அபர ஏகாதசி விரத பலன்கள்

1. ஒரு பக்தர் கிருஷ்ணருக்கு பிரியமான தாமோதர மாதத்தில் தினமும் அதிகாலை எழுந்து நீராடி, பகவானை பிரார்த்தனை செய்வதால் என்ன பலனை அடைய முடியுமோ, அந்த பலனை அபர ஏகாதசி விரத வழிபாட்டினால் அடைய முடியும்

2. அபர ஏகாதசியன்று விரதம் இருந்து பகவானை வழிபட்டால், காசிக்கு சென்று சிவராத்திரி விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்ட பலனை பெறுவதற்கான வாயப்பு கிடைக்கும்.

3. கயாவிற்கு சென்று முன்னோர்களுக்கு திதி கொடுப்பதால் கிடைக்கும் பலனை, அபர ஏகாதசி விரதத்தின் மூலம் அடைய முடியும்.

4. கேதார்நாத், கும்பமேளாவில் புனித நீராடிய பலனை அபர ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் எளிதாக அடையலாம்.

5. பத்ரிநாத் மற்றும் குருஷேத்திராவில் பகவானை தரிசனம் செய்த பாக்கியத்தை, மிக எளிமையாக அபர ஏகாதசி விரதம் இருந்து பகவானை வழிபடுவதன் மூலம் அடையாம்.

6. தானங்கள் செய்வதால் என்னென்ன பலன்களை அடைய முடியுமோ, அந்த பலன்கள் அபர ஏகாதசி விரதம் மற்றும் வழிபாட்டின் மூலம் கிடைக்கும்.

தகவல்: கருணா சிந்து கிருஷ்ண பிரபு, இஸ்கான் கோவில், திருநெல்வேலி

Read Entire Article