பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: தகுதி சுற்றில் தோல்வி கண்டு வெளியேறிய சுமித் நாகல்

5 hours ago 4

பாரிஸ்,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சுமித் நாகல், ஆஸ்திரியாவின் ஜூரிஜ் ரோடியோனோவை எதிர்கொண்டார்.

இதில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜூரிஜ் ரோடியோனோ 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தி வெற்றி பெற்றார். தோல்வி கண்ட சுமித் நாகல் தொடரில் இருந்து வெளியேறினார். 

Read Entire Article