
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உடன்பிறப்புகளின் அன்பான வாழ்த்துகள் என்னை மேலும் உறுதியுடன் உழைப்பதற்கும் இனம், மொழிகாக்கும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, அன்னைத் தமிழைக் காப்பேன் என இந்தப் பிறந்தநாளில் சூளுரைக்கிறேன்"
தமிழ்நாடு காட்டுகின்ற பாதையே ஒவ்வொரு மாநிலமும் தன் தாய் மொழியை காப்பதற்கான பாதை. மற்ற மாநிலங்களும் தாய்மொழியைக் கட்டாயமாக்கும் உத்தரவை வெளியிட்டு வருகின்றன
மாநில மொழிகளை வளர்க்க மும்மொழி திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்று சொல்வது பச்சைப் பொய் . மக்களின் அன்பான வாழ்த்துகள் இனம், மொழி காக்கும் போராட்டத்தை முன்னெடுக்க ஊக்கமாக உள்ளன.
அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஆயுதமாகவும் கேடயமாகவும் தமிழைக் காத்து நிற்கிறது. இந்தியமொழிகளை ஒவ்வொருமுறையும் காத்துநிற்பது தமிழ்நாடும், தமிழர்களின் மொழியுணர்வும்தான். இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்போம் என்பது பாஜகவின் மறைமுக மொழிக் கொள்கை. பாஜகவின் மறைமுக மொழிக்கொள்கையை நேரடியாக தோலுரித்துக் காட்டிய மாநிலம் தமிழ்நாடு. எதிர்கால மாணவசமுதாயத்தினர் தாய்மொழியாம் தமிழை கற்கவேண்டியது மிகவும் அவசியம்" என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.