மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை திமுக அரசு நிலைநாட்டி வருகிறது: உதயநிதி ஸ்டாலின்

4 hours ago 2

சென்னை,

துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா கிடைப்பதில் இருந்த சிரமங்களை நீக்கி பட்டா வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் பேரில், ஓராண்டுக்குள் 1.38 இலட்சம் பட்டாக்களை நம் திராவிட மாடல் அரசு வழங்கி இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம், திருவொற்றியூரில் நடைபெற்ற அரசு விழாவில் கத்திவாக்கத்தைச் சேர்ந்த 1500 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கி வாழ்த்தினோம்.

இந்த நிகழ்ச்சியில், வட சென்னை அனல் மின் நிலையத் திட்டத்துக்கு நிலம் கொடுத்ததற்காக மாற்று இடம் பெற்ற 400 பயனாளிகளுக்கும் அவர்களுக்கான பட்டாக்களை வழங்கினோம். உண்ண உணவு - உடுத்த உடை - இந்த வரிசையில் 'இருக்க இடம்' எனும் அடிப்படைத் தேவையை மட்டுமின்றி, அந்த இடத்துக்கான மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளையும் நம்முடைய கழக அரசு நிலைநாட்டி வருகிறது .

மேலும், அப்பகுதி மக்களுக்காக 18 ஆயிரம் பட்டாக்களை தயார் செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், விரைவில் அவற்றையும் வழங்கிடுவோம் என்று உறுதியளித்தோம்.

பட்டாக்களை பெற்ற கத்திவாக்கம் பகுதி மக்களுக்கு என் அன்பும், வாழ்த்தும். என தெரிவித்துள்ளார் .

Read Entire Article