மக்களிடையே பக்தி குறைந்ததுதான் திடீர் மழைக்கு காரணம்: மதுரை ஆதீனம்

3 months ago 21

மதுரை,

வீரபாண்டிய கட்டபொம்மனின் 225-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள சிலைக்கு மதுரை ஆதினம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் மதுரை ஆதினம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

இன்றைய தலைமுறைகள் சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்த வேண்டும். இளைஞர்களுக்கு விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறேன். அவர்கள் இல்லை என்றால் நான் இன்று இல்லை.

கோவில் இடங்களை வைத்திருப்பவர்கள் எல்லாம் சரியாக குத்தகை கொடுப்பதில்லை. அதனால்தான் பருவம் தவறி மழை பெய்கிறது. மக்கள், இளைஞர்களிடையே பக்தி குறைவாக இருப்பது தான் திடீர் மழைக்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article