
தமிழில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் ரகுல் பிரீத் சிங். அதனைத்தொடர்ந்து அவர் 'தேவ்', 'என்.ஜி.கே.', 'அயலான்', ஆகிய படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் 'இந்தியன்-2' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை காதலித்து திருமணம் செய்துகொண்ட ரகுல் பிரீத் சிங், திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். இந்த நிலையில் உலக சுகாதார தினத்தையொட்டி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஆரோக்கியமான மற்றும் கவனமுள்ள தேர்வுகள் மூலமாக உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்ளுங்கள். விருப்பமான புத்தகத்தை படியுங்கள். இயற்கையுடன் இணைந்திருந்தால் உங்களுக்கு அற்புதமான உணர்வு கிடைக்கும். பிடித்த விளையாட்டை விளையாடுங்கள்.
உங்களை அமைதிப்படுத்தவும், மன சமநிலையைக் கண்டறியவும் தியானத்தில் ஈடுபடுங்கள். ஒரு நாளைக்கு 5 நிமிடங்கள் மட்டுமே பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும். எனவே ஜாலியாக இருங்கள். சிரித்துக்கொண்டே இருங்கள். ஏனெனில் மகிழ்ச்சியே, ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சிறந்த மருந்து.
குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். உங்கள் கனவுகளை அவர்களிடம் சொல்லுங்கள். உடல் என்ற விஷயத்தை மையப்படுத்தி இருக்கும் இந்த வாழ்க்கையை பாதுகாத்து வாழுங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.