
யூபியா,
7-வது ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அருணாசலபிரதேசத்தில் உள்ள யூபியாவில் நடந்து வருகிறது. இதில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறும் மகுடத்துக்கான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான வங்காளதேச அணி, 3 முறை சாம்பியனான இந்தியாவை எதிர்கொள்கிறது.
கடந்த ஆண்டு அரையிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட்டில் வங்காளதேசத்திடம் தோல்வியை தழுவிய இந்திய அணி அதற்கு பதிலடி கொடுத்து 4-வது முறையாக வாகை சூட முயற்சிக்கும். அதே நேரத்தில் வங்காளதேச அணி சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.