2-ம் கட்ட மெட்ரோ: திருமங்கலம் எம்விஎன் நகர் உள்ளிட்ட 3 இடங்களில் வணிக மேம்பாட்டு திட்டம்

3 hours ago 1

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் திருமங்கலம் எம்விஎன் நகர் உள்பட 3 இடங்களில் வணிக மேம்பாட்டுக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கூட்டு நிறுவனத்துக்கு ரூ.41.87 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பயணச்சீட்டு வருவாய் தவிர, பிற வழிகளில் வருவாய் ஈட்ட மெட்ரோ ரயில் நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக, மெட்ரோ ரயில் நிலையங்களில் வணிக மேம்பாட்டுக்கான இடங்களை அடையாளம் கண்டு, அங்கு தேவையான வளர்ச்சி நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Read Entire Article