மகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு

3 months ago 30

சென்னை,

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆடி, தை அமாவாசைகளில் திதி கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுப்பார்கள்.

இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் நீர்நிலைகளில் குவிந்தனர். சென்னையில், திருவொற்றியூர் கடற்கரை பகுதி, மயிலாப்பூர் கபாலீசுவர் கோவில் தெப்பக்குளம் உள்ளிட்ட கோவில் தெப்பக்குளங்கள், நீர் நிலைகளில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு, எள்ளுப்பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்தனர்.

அதேபோல், காரைக்குடி, கோவிலூர் கொற்றாளீஸ்வரர் கோவில் குளக்கரையில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்து முன்னோர்களுக்கு தர்பனம் செய்து வழிபாடு செய்தனர். மேலும், கடலூர் வெள்ளி கடற்கரை, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செலுத்தினர்.

Read Entire Article