மகள் திருமணம்: சார்லியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்த நடிகர் கிங்காங்

5 hours ago 1

சென்னை,

தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்குப் பெயர் போனவர் நடிகர் கிங்காங். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவர், நடிகர் ரஜினிகாந்தின் 'அதிசயபிறவி' படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கிங்காங்.

இவருக்குத் திருமணமாகி கலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், மகன் ஒருவரும் உள்ளனர். இவரின் மகளுக்கு வரும் ஜூலை 10ம் தேதி சென்னை அசோக் பில்லர் பகுதியில் இருக்கும் மஹாலில் திருமணம் நடைபெறுகிறது.

இதையொட்டி நடிகர் கிங்காங், திரையுலகில் இருப்பவர்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் திருமண அழைப்பிதழ் வைத்து வருகிறார். இந்நிலையில், நடிகர் சார்லியை நேரில் சந்தித்து தனது மகளின் திருமண கொடுத்து வரவேற்றார்.

குடும்பத்தினர் சொல்லி அழைக்கும் பெயரான... "வா சங்கரா" என்று அன்போடு அழைத்து "நம் வீட்டுத் திருமணம் அவசியம் வருகிறேன்" என்று வாழ்த்தி அழைப்பிதழை பெற்றுக் கொண்ட நடிகர் சார்லி அவர்கள் pic.twitter.com/qRQ9nmbEOa

— Actor KingKong (@actorkingkong) July 8, 2025
Read Entire Article