சென்னை : தமிழ்நாட்டில் 2021 ம் ஆண்டு மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்டதும் பெண்களது வாழ்வில் வெளிச்சம் ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் விடியல் பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் அமல்படுத்தியதை அடுத்து பெண்கள் இலவசமாக மகிழ்ச்சியாக பேருந்துகளில் சென்று வருகிறார்கள். இந்த திட்டம் மூலம் பெண்கள் மாதம்தோறும் ரூ.1000த்திற்கும் மேல் சேமிப்பதாக மாநில திட்டக்குழு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் விடியல் பயண திட்டத்தின் கீழ் கட்டணமின்றி பயணித்தவர்கள் பற்றிய விவரங்களை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மகளிர் விடியல் பயண திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் தற்போது வரை சுமார் 132.91 கோடி பேர் பயணித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் 3.65 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயணம் மேற்கொண்ட பயணிகளை விட 23% சதவீதம் அதிகம் ஆகும். மகளிர் விடியல் பயண திட்டம் அறிமுகமானதிலிருந்து இதுவரை ஒரே நாளில் அதிகபட்சமாக ஏப்ரல் 28, 2025 அன்று 13.59 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
The post மகளிர் விடியல் பயண திட்டம் மூலம் இதுவரை சுமார் 132.91 கோடி பேர் பயணம் : மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு! appeared first on Dinakaran.