* ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெற உள்ள 53வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
* ஐபிஎல் தொடர்களில் இரு அணிகளும் இது வரை 31 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
* அவற்றில் கொல்கத்தா 15, ராஜஸ்தான் 14 போட்டிகளில் வென்று உள்ளன. எஞ்சிய 2 போட்டிகள் கைவிடப்பட்டன.
* இந்த போட்டிகளில் அதிகபட்சமாக ராஜஸ்தான் 224, கொல்கத்தா 223 ரன் விளாசியுள்ளன.
* குறைந்தபட்சமாக கொல்கத்தா 125, ராஜஸ்தான் 81 ரன் எடுத்துள்ளன.
* இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 வெற்றி, தலா 2 தோல்விகளை பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு ஆட்டம் டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டது.
* மற்ற அணிகளுடன் இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய தலா 5 போட்டிகளில் கொல்கத்தா 2-2 என்ற கணக்கிலும், ராஜஸ்தான் 1-4 என்ற கணக்கிலும் வெற்றி, தோல்விகளை பார்த்துள்ளன.
* நடப்புத் தொடரில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் 11 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை மட்டும் பெற்றதால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது.
* அஜிங்கிய ரகானே தலைமையில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா, இதுவரை 10 போட்டிகளில் ஆடி 4 வெற்றிகளுடன் அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.
The post 53வது லீக் போட்டியில் வாய்ப்பில்லாத ராஜஸ்தான் வந்தால் விடாத கொல்கத்தா appeared first on Dinakaran.