54வது லீக் போட்டியில் அஞ்சாத கிங்காக பஞ்சாப் அஞ்சு தோல்வியுடன் லக்னோ

3 days ago 4

* இன்று இரவு இமாச்சல் பிரதேசம் தர்மசாலாவில் நடைபெறும் 54வது ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

* ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் பஞ்சாப் 6 வெற்றி, 3 தோல்வி, ஒரு ரத்து காரணமாக 13 புள்ளிகளுடன் அடுத்த சுற்று வாய்ப்பை நெருங்கி வருகிறது.

* ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ 5 வெற்றி, 5 தோல்விகளுடன் 10 புள்ளிகளை பெற்று அடுத்தச் சுற்று வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.

* ஐபிஎல் தொடர்களை பொறுத்தவரை இந்த 2 அணிகளும் இதுவரை 5 போட்டிகளில் மட்டுமே சந்தித்துள்ளன.

* அவற்றில் லக்னோ 3, பஞ்சாப் 2 போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளன.

* இந்த போட்டிகளில் அதிகபட்சமாக லக்னோ 257 ரன் வெளுக்க, பஞ்சாப் 201 விளாசி உள்ளது.

* குறைந்தபட்சமாக லக்னோ 159, பஞ்சாப் 133 ரன் அடித்துள்ளன.

* இந்த இரு அணிகளும் கடைசியாக சந்தித்த 3 போட்டிகளில் லக்னோ 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

* இவ்விரு அணிகளும் மற்ற அணிகளுடன் கடைசியாக மோதிய தலா 5 ஆட்டங்களில் பஞ்சாப் 3-1 என்ற கணக்கில் வெற்றி, தோல்விகளை பார்த்துள்ளது. ஒரு ஆட்டம் ரத்தானது.

* லக்னோ கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 2-3 என்ற வெற்றி, தோல்விகளை சந்தித்து இருக்கிறது.

The post 54வது லீக் போட்டியில் அஞ்சாத கிங்காக பஞ்சாப் அஞ்சு தோல்வியுடன் லக்னோ appeared first on Dinakaran.

Read Entire Article