மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்ஸ் அணி வெற்றி

5 hours ago 1

பெங்களூரு,

3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் வதோதராவில் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து உ.பி.வாரியர்சின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிரண் நவ்கிரே மற்றும் விருந்தா தினேஷ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் விருந்தா தினேஷ் 4 ரன்னிலும், நவ்கிரே 17 ரன்னிலும் அவுட் ஆகினர்.தொடர்ந்து களம் புகுந்த தீப்தி சர்மா 13 ரன்னிலும், தஹ்லியா மெக்ராத் 24 ரன்னிலும், ஸ்வேதா ஷெராவத் 11 ரன்னிலும், கிரேஸ் ஹாரிஸ் 2 ரன்னிலும், உமா செத்ரி 3 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து சினெல்லே ஹென்றி மற்றும் சோபி எக்லெஸ்டோன் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் சினெல்லே ஹென்றி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிக்சர் மழை பொழிந்த அவர் 18 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் உ.பி.வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 177 ரன்கள் குவித்தது. உ.பி.வாரியர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக சினெல்லே ஹென்றி 23 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜெஸ் ஜோனசென் 4 விக்கெட்டுகளும், மரிசானே காப் மற்றும் அருந்ததி ரெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து 178 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் சார்பில் களமிறங்கிய வீராங்கனைகள் உ.பி. வாரியர்ஸ் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். டெல்லி அணியின் சார்பில் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் மட்டுமே அதிரடியாக ரன்கள் சேர்த்து தனது அரைசதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 56 ரன்களில் அவரும் ஆட்டமிழந்தார்.

முடிவில் டெல்லி அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. உ.பி.வாரியர்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக ராண்டி கவுட் மற்றும் கிரேஸ் ஹாரீஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்மூலம் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 00 ரன்கள் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.

Read Entire Article