மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்திய அணி தொடர்ந்து 5-வது வெற்றி பெற்று அசத்தல்

6 days ago 3

ராஜ்கிர்,

8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், தென் கொரியா சீனா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இதில் இந்திய அணி தான் விளையாடிய முதல் 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதனையடுத்து இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜப்பானுடன் இன்று மோதியது. இதிலும் வெற்றி வேட்கையை தொடர்ந்த இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி தொடர்ந்து 5-வது வெற்றியை பதிவு செய்தது. இந்தியா தரப்பில் தீபிகா 2 கோல்களும், நவ்னீத் கவுர் ஒரு கோலும் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர்.

Full-Time AlertIndia secures a dominant 3-0 victory over Japan! With this win the team tops the table and advances to the semifinals of the Bihar Women's Asian Champions Trophy 2024. Catch the action this Tuesday as the Indian Women's Hockey Team takes the field for a… pic.twitter.com/Nt3F9CW9rA

— Hockey India (@TheHockeyIndia) November 17, 2024

இந்திய அணி லீக் சுற்றில் தோல்வியே சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article