புதுச்சேரி, டிச. 17: புதுச்சேரி நைனார்மண்டபம் சுதானா நகரை சேர்ந்தவர் மினிபிரியா. இவர் அதேபகுதியை சேர்ந்த மாயவன், அவரது மனைவி ரேவதி, ஆகியோரிடம் தீபாவளி சீட்டு கட்டியதாக கூறப்படுகிறது. அப்போது ரேவதி தனது மகளின் திருமணத்திற்கு உதவுமாறு மினிபிரியாவிடம் கேட்டுள்ளார். அதன்பேரில் மினிபிரியா தனக்கு தெரிந்தவர்கள் மூலம் கடன் வாங்கி ₹35 லட்சம் மற்றும் தன்னுடைய பணம் ₹3.5 லட்சம் சேர்ந்து கடனாக கொடுத்துள்ளார். பின்னர் சிறிது காலத்தில் திருப்பி தருவதாக மாயவன் மற்றும் ரேவதி தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காமல் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மினிபிரியா முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து தப்பியோடிய தம்பதியை தேடி வந்தனர். இதற்கிடையே பாகூரில் பதுங்கியிருந்த மாயவன், ரேவதி ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
The post மகளின் திருமணத்துக்காக கடன் வாங்கினர் ₹38 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த தம்பதி கைது appeared first on Dinakaran.