மகன்களுடன் விஜயதசமி கொண்டாடிய நடிகை நயன்தாரா

3 months ago 22

சென்னை,

இயக்குநர் விக்னேஷ் சிவன் 'போடா போடி' படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ். விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ல் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி விஜயதசமி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளனர். இதையொட்டி, நயன்தாரா தனது எக்ஸ் தள பதிவில், அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தனது இரு மகன்களுடன் விஜயதசமி சிறப்பு வழிபாடு செய்து தங்கள் ஊழியர்களுக்கு மகன்கள் கையால் பரிசுகளை வழங்கினார்கள். பரிசுகளை வழங்கும் போது இருகைகளால் அதை கொடுக்கச் சொல்லி நன்றி சொல்ல சொல்லி தனது மகன்களுக்கு நயன்தாரா சொல்லிக் குடுப்பதைப் பார்க்க நம் மனம் கவர்கிறது.

விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்.ஐ.கே படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா டெஸ்ட் , மண்ணாங்கட்டி , மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

Happy Vijayadashami Everyone pic.twitter.com/pQrMFavo0u

— Nayanthara✨ (@NayantharaU) October 12, 2024
Read Entire Article