
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பை மலாடு பகுதியில் சிலர் போதைப்பொருள் விற்க வர உள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவத்தன்று அப்பகுதிக்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்தப்பகுதியில் நின்றிருந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பிஓட முயன்றார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்து, அவர் வைத்திருந்த பையை சோதனை நடத்தினர். அதில், 200 கிராம் எடைக்கொண்ட கொகைன் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும். விசாரணையில், அவர் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர் என்பதும், சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்து போதைப்பொருள் விற்று வந்ததும் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நைஜீரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.