Broccoli soupதேவையானவை :
ப்ரோக்கோலி – 1 கட்டு,
வெங்காயம் – 1,
பூண்டு – 3-4 பற்கள்,
கேரட் – 1,
உருளைக்கிழங்கு – 2,
தக்காளி – 2,
இஞ்சி – ஒரு சிறு துண்டு,
பச்சை மிளகாய் – 1,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
தனியா தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
கொத்தமல்லி இலை – அலங்கரிக்க.
செய்முறை:
ப்ரோக்கோலியை சிறிய துண்டுகளாக வெட்டி, நன்கு கழுவவும். வெங்காயம், பூண்டு, கேரட், உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டி விதைகளை எடுத்து, சிறிய துண்டுகளாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, தனியா தூள், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் கேரட், உருளைக்கிழங்கு, தக்காளியை சேர்த்து வதக்கியதும் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும், ப்ரோக்கோலி துண்டுகளை சேர்த்து வேக வைக்கவும். காய்கறிகள் எல்லாம் நன்றாக வெந்த பிறகு, மிக்ஸியில் அரைத்து அடுப்பில் ஒரு கொதி வந்ததும் உப்பு, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
The post ப்ரோக்கோலி சூப் appeared first on Dinakaran.