கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி போலீஸ் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி சிறுத்தைகள் நடமாடி வருவது அப்பகுதி சிசிடிவி கேமராவில் பதிவாகி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீஸ் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா வந்து இரையைத்தேடி பல பகுதிகளில் சுற்றித்திரிந்தது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை போலீஸ் குடியிருப்பு பகுதியில் உலா வருவதை கண்டறிய, வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post போலீஸ் குடியிருப்பில் சிறுத்தை உலா: பொதுமக்கள் பீதி appeared first on Dinakaran.