சென்னை: பேச்சுவார்த்தை நடத்தி விசைத்தறியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் வலியுறுத்தி உள்ளார். வேலை நிறுத்தம் காரணமாக லட்சக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு என பேரவையில் பேசினார். 2 ஆயிரம் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூலி குறைத்து வழங்கப்படுவதாக கூறினார். கூலி உயர்வு குறித்து ஜவுளி உற்பத்தியாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பழனிசாமி வலியுறுத்தினார்.
The post விசைத்தறியாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றுக: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.