சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூடுதலாக 100 சிசிடிவி கேமராக்கள் பொருத்த ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே காவல் அதிகாரிகள் கூறியதாவது: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. இந்த நிலையத்தில் 90-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கஞ்சா, குழந்தை கடத்தல், செல்போன், நகை திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல் சம்பவங்களில் ஈடுபடுவோரை விரைந்து பிடிக்க சிசிடிவி கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன.