வாஷிங்டன்: அமெரிக்காவில் போலீஸ் அதிகாரியால் சுட்டு கொல்லப்பட்ட கறுப்பின பெண்ணின் குடும்பத்துக்கு 1 கோடி அமெரிக்க டாலர்கள் இழப்பீடாக வழங்கப்பட உள்ளது. இலினொய்ஸ் மாகாணத்தில் உள்ள சங்கமன் கவுண்ட்டியை சேர்ந்த சோனியா மாஸே என்ற 36 வயது கறுப்பின பெண் கடந்த ஆண்டு அவரது வீட்டிலேயே போலீசாரால் சுடப்பட்டு உயிரிழந்தார்.மனவளர்ச்சி குன்றிய அவர் சம்பவம் நிகழ்ந்த நாளன்று 911 என்ற அவசர எண்ணை தொடர்பு கொண்டு தனது வீட்டில் முகம் தெரியாத நபர் நுழைந்து விட்டதாக புகார் அளித்துள்ளார்.
இதை அடுத்து அங்கு கிரேசன் என்பவரும் வேறு ஒரு போலீசும் வந்துள்ளனர். அப்போது சமயலறையில் அடுப்பில் தண்ணீர் சூடு செய்வதை நிறுத்துமாறு மாஸேவிடம் கூறியதாகவும் ஆனால் அதை செய்யாமல் மாஸே சிரித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த கிரேசன் மாஸே முகத்தை நோக்கி சுட்டதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். கிரேசன் கைது செய்யப்பட்ட நிலையில் சங்கமன் கவுண்டன் நிர்வாகம் 1 கோடி டாலர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.87 கோடி இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
The post போலீஸால் சுட்டுக்கொல்லப்பட்ட கருப்பின பெண்ணுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.87 கோடி இழப்பீடு..!! appeared first on Dinakaran.