புழல்: புழல் சிறை வளாகத்தில் பார்சலில் கிடந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை புழல் சிறையில் தண்டனை, விசாரணை மற்றும் மகளிர் என 3 பிரிவுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் போதை பொருள் கடத்தல் என்று பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புழல் சிறையில் அடிக்கடி சிறை காவலர்கள் சோதனை நடத்தும்போது கைதிகளிடம் இருந்து செல்போன் மற்றும் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விசாரணை சிறையில் சிறை காவலர்கள், மோப்ப நாயுடன் ரோந்து சென்றபோது ஒரு பொட்டலத்தை பிரித்துபார்த்தபோது 42 கிராம் கஞ்சா இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதுசம்பந்தமாக சிறை அதிகாரிகள் கொடுத்த புகாரின்படி, புழல் போலீசார் வழக்குபதிவு செய்து கஞ்சா பொட்டலத்தை வீசிய மர்ம நபர்கள் யார் என்று சிறை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post போலீசார் ரோந்து சென்றபோது புழல் சிறையில் பார்சலில் 42 கிராம் கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.