அணுகுண்டு இருக்குது பயப்பட மாட்டோம்: பாகிஸ்தான் புதிய மிரட்டல்

9 hours ago 2

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில்,‘இந்தியா – பாகிஸ்தான் இடையே முழு அளவிலான போர் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இரு நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்திருப்பதால், உலக நாடுகள் இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் குறித்து கவலைப்பட வேண்டும்.’ என்று குறிப்பிட்டார். அதேபோல் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார்,

அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசுகையில், ‘பாகிஸ்தான் அணு ஆயுத நாடு; எனவே பயப்படவேண்டியதில்லை. இந்தியாவின் எந்த நடவடிக்கைக்கும் பதிலடி கொடுப்போம். பஹல்காமில் நடந்த தாக்குலை கண்டிக்கிறோம். அதேநேரம் பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எந்த தொடர்பும் இல்லை’ என்று மறுத்தார்.

The post அணுகுண்டு இருக்குது பயப்பட மாட்டோம்: பாகிஸ்தான் புதிய மிரட்டல் appeared first on Dinakaran.

Read Entire Article