மாஸ்கோ: கிழக்கு உக்ரைனை ஒட்டி உள்ள குர்ஸ்க் பிராந்தியத்தை உக்ரைன் ராணுவம் கைப்பற்றியது. இந்நிலையில், குர்ஸ்க் பகுதியை ரஷ்யா முழுமையாக கைப்பற்றியதாக நேற்று தெரிவித்தது.
இதுதொடர்பாக அதிபர் புடினிடம் விளக்கம் அளித்த ராணுவ தளபதி வலேரி ஜெராசிமோவ் அளித்த பேட்டியில், ‘‘ உக்ரைன் பிடியிலிருந்து குர்ஸ்க் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் வடகொரியா ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள், ரஷ்ய படையினருடன் தோளோடு தோள் சேர்ந்து போர்ப் பணிகளைச் செய்தனர். சிறப்பாக செயல்பட்ட அந்த நண்பர்களை ரஷ்யா ஒருபோதும் மறக்காது’’ என்றார்.
The post உக்ரைன் கைப்பற்றிய குர்ஸ்க் பகுதியை மீட்டது ரஷ்யா: வடகொரிய வீரர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.