போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலம் வேலூரில் வரும் 29ம் தேதி

1 day ago 4

வேலூர், மே 22: வேலூர் மாவட்டத்தில் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்களை வரும் 29ம் தேதி பொது ஏலத்தில் விடுகின்றனர். வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவ்வாகனங்கள் உடைக்க தகுதியுள்ள நிலையில் உள்ளன. இந்த வாகனங்கள் வரும் 29ம் தேதி காலை 9 மணி முதல் வேலூர் நேதாஜி மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது.
வாகனத்தை ஏலம் எடுக்க பார்வையிடுவோர் ரூ.100 நுழைவு கட்டணம் செலுத்திய பின் ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவர். ஏலத்தொகையுடன் 12 சதவீதம் விற்பனை வரியும் சேர்த்து செலுத்த வேண்டும். இதற்கு உண்டான ரசீது வழங்கப்படும். ஏலம் எடுத்த வாகனத்திற்குண்டான ரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணமாகும் என வேலூர் எஸ்பி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலம் வேலூரில் வரும் 29ம் தேதி appeared first on Dinakaran.

Read Entire Article