இருப்பவருக்கு டெத் சர்டிஃபிகேட்... இல்லாதவருக்கு லைஃப் சர்டிஃபிகேட்! - கலக்கத்தில் கள்ளக்குறிச்சி வருவாய்த் துறையினர்

8 hours ago 2

இறந்தவர்கள் உயிர்பெற்று வருவதை மர்மக் கதைகளில் தான் படித்திருக்கிறோம். ஆனால், உயிரோடு இருப்பவர்கள் இறந்துவிட்டதாகவும், இறந்தவர்கள் உயிரோடு இருப்பது போலவும் சான்றழித்து அந்த மர்மக் கதைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டிருக்கிறார்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள்!

கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் மூங்​கில்​துறைப்​பட்​டுக் கிரா​மத்​தைச் சேர்ந்​தவர் சுபான் பாய். இவர், ‘நான் நலமாக இருக்​கும் போது நான் இறந்​து​விட்​ட​தாக சங்​க​ராபுரம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் இறப்​புச் சான்​றிதழ் கொடுத்​திருக்​கி​றார்​கள். அதை வைத்து இன்​னொரு​வர் எனது சொத்தை அபகரித்​துள்​ளார். இப்​போது, நான் உயிரோடு இருப்​ப​தாக விஏஓ-​விடம் சான்​றிதழ் பெற்று எனது சொத்தை மீட்க போராடிக் கொண்​டிருக்​கிறேன்’ என மாவட்ட ஆட்​சி​யரிடம் அண்​மை​யில் மனு கொடுத்து அனை​வரை​யும் திகைக்க வைத்​தார்.

Read Entire Article