சென்னை: சென்னை பன்னாட்டு விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சென்னை போலீஸ் கமிஷனர் அருணை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். அதில், வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய பயணிகளின் அவர்களின் முந்தைய பாஸ்போர்ட் விபரங்கள் மற்றும் அவர்களுடையே உண்மையான சான்றுகளை மறைத்து பெயர், பிறந்த தேதி மற்றும் பெற்றோர்கள் விபரங்கள் மூலம் போலியான ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்டுகள் பெற்று சிலர் வெளிநாடு செல்ல முயன்றதாகவும், எனவே சம்பந்தப்பட்ட பயணிகள் மூலம் போலி பாஸ்போர்ட்கள் தயாரித்து கொடுக்கும் ஏஜென்ட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் அருண் உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் போல் பாஸ்போர்ட்கள் தயாரித்து மோசடி செய்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், மதுரை மாவட்டம் பரசுராமன்பட்டியில் ‘சாய் டூர் டிராவல்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வரும் கல்யாண், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பேருந்து நிலையம் அருகே மெட்ரோ ஸ்டுடியோ அன்டு டிராவல்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வரும் நல்லமுகமது, அவரது நண்பரான தீன் சர்வீஸ் சென்டர் என்ற நடத்தி வரும் பவுசல் ரஹ்மான், ஜேகே ஏர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் நாசர் அலி மற்றும் மதுரை சமயநல்லூரை சேர்ந்த ஏஜென்ட்கள் குமார் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்களின் பாஸ்போர்ட்கள் மற்றும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயாரித்து லட்சக்கணக்கில் பணம் பாஸ்போர்ட்கள் மூலம் விசா பெற்று ஏமாற்றி வந்தது தெரியவந்தது.
அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் போலி பாஸ்போர்ட்டுகள் தயாரிக்க உடந்தையாக இருந்த ஏஜென்ட்கள் சிவகங்ககை மற்றும் மதுரை சேர்ந்த சதீஷ்குமார்(46), கல்யாண்(40), நல்லா முகமது(60), நாசர் அலி(47), பவுசல் ரஹ்மான்(29) குமாரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து போலி பாஸ்போர்ட்கள் தயாரிக்க பயன்படுத்திய 2 கணினிகள், ஒரு லேப் டாப், 6 செல்போன்கள், 54பாஸ்போர்டுகள், பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்தவர்களுடன் செய்த ஒப்பந்த பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த மோசடி வழக்கில் குற்றவாளிகளை கூண்டோடு கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் அருண் பாராட்டு தெரிவித்தார்.
The post போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட் தயாரித்த முக்கிய ஏஜென்ட்கள் 6 பேர் கைது appeared first on Dinakaran.