
சென்னை,
தனது முகத்தை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் போலி ஆபாச வீடியோ வெளியாகி இருப்பதாக நடிகை கிரண், சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை கிரண், தனது போலி ஆபாச வீடியோவை ஷேர் அல்லது டவுன்லோடு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
மார்பிங் ஆபாச வீடியோவை பரப்புவதன் மூலம் தான் பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ள கிரண், சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.