
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை, 1-வது தெருவைச் சேர்ந்த ராஜா மகன் மாசானம்(எ) அஜித்குமார் (வயது 26), பாலியல் குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஆவார். இவர் மீது சேரன்மகாதேவி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில் நேற்று (23.5.2025) மாசானம்(எ) அஜித்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.