போர்ப்பதற்றம்: சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு

9 hours ago 2

புதுடெல்லி,

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சம் அடைந்துள்ளது. எல்லையோர மாவட்டங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்கி வருகிறது. பாகிஸ்தானின் அத்துமீறலை இந்தியா முறியடித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கைகளை இரு நாடுகளும் முன்னெடுத்து வருகிறது, குறிப்பாக பொதுமக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் போர் பதற்றம் காரணமாக இன்று நடைபெற இருந்த பட்டய கணக்காளருக்கான சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கி மே 14 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இணைச் செயலாளர் ஆனந்த்குமார் சதுர்வேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் நிலவும் பதற்றம் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பட்டயக் கணக்காளர்கள் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் http://www.icai.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article