
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால், இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது
இந்நிலையில், போர் பதற்றம் காரணமாக ஜம்மு-காஷ்மீரில் மாவட்டம் வாரியாக அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவசர கால கட்டுப்பாட்டு மையங்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை தெரிந்துகொள்ள இந்த எண்கள் அறிவிக்கப்படுள்ளன. எல்லையில் உள்ள மக்கள் பாதுகாப்பை மேலும் உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவசரகால உதவி எண்கள் விவரம்:
ஜம்மு | 0191-2571912, 0191-2571616, 0191-2549100, 2544920 |
சம்பா | 01923-241004, 01923-246915 |
பூஞ்ச் | 01965-220258, 9086253188 |
ரஜோரி | 01962-260207, 01962-260033 |
உதம்பூர் | 01992-270212, 01992-276915 |
ரைசி | 01991245587, 01991-245757 |
ரம்பன் | 01998-29550, 01998-266790 |
கிஷ்த்வார் | 1995-259555, 9482217492 |
தோடா | 01996-233530, 234413, 7298923100 |
ரைசி | 01991245587, 01991-245757 |
ஸ்ரீநகர் | 0195-1255042, 8082567612 , 0194-2483651, 0194-2457552, 0194-2457543, 910998355, 9103998356, 9103998357, 9103998358 |
புல்வாமா | 0193-3242442, 01933240354 |
அனந்த்நாக் | 0193-2222337, 7780885759, 9697982527 |
சோபியான் | 0193-3293147, 9419025891 |
குல்காம் | 0193-1925900, 9103424365 |
குப்வாரா | 0195-5253522, 9419268121 |
ஹந்தர்பால் | 0194-2416260, 0194-2416261, 8493868773 |
பெந்திபுரா | 7006526985, 7006630771, 7006328689, 7006378557 |
பாரமுல்லா | 01952234343, 7006493646, 7006504312 |