​போப் பிரான்​சிஸ்​-க்கு பேர​வை​யில் அஞ்​சலி: இறுதி நிகழ்​வில் அமைச்​சர் பங்​கேற்க முதல்​வர் உத்​தரவு

5 hours ago 1

சென்னை: போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழக அரசு சார்பில் அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், பரிவோடும் முற்போக்குக் கொள்கைகளோடும் கத்தோலிக்கத் திருச்சபையினை வழிநடத்தி, பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமையான திருத்தந்தை போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவு குறித்து அறிந்து மிகவும் வேதனையடைந்ததாகத் தெரிவித்திருந்தார்.

Read Entire Article