அமலாக்கத்துறையில் ஏதோ கோளாறு உள்ளது: ஒன்றிய அரசின் கூடுதல் வழக்கறிஞர் ராஜு பகிரங்க ஒப்புதல்

7 hours ago 2

டெல்லி: அமலாக்கத்துறையில் ஏதோ கோளாறு உள்ளது என்று ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு பகிரங்க ஒப்புதல் அளித்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனு அரைவேக்காட்டுத்தனமாக உள்ளது. புலனாய்வு அமைப்புடன் ஆலோசிக்காமலேயே அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் எஸ்.வி.ராஜு தகவல் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட அபய் எஸ்.ஓகா, வழக்கறிஞர் மூலமாக பதில் மனு தாக்கல் செய்திருக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார். அமலாக்கத்துறையே பதில் மனுவை தாக்கல் செய்துள்ளதால் வழக்கறிஞரை குறைகூற முடியாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.

The post அமலாக்கத்துறையில் ஏதோ கோளாறு உள்ளது: ஒன்றிய அரசின் கூடுதல் வழக்கறிஞர் ராஜு பகிரங்க ஒப்புதல் appeared first on Dinakaran.

Read Entire Article