
சென்னை,
போதையின் பாதையில் இளைஞர்கள், மாணவர்கள் செல்லக் கூடாது என கேட்டுக்கொள்வதாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "தமிழ்நாட்டின் இளைஞர், மாணவர் சமுதாயத்திற்கு உங்கள் குடும்பத்தை சார்ந்த ஒருவனாக, உங்கள் தந்தையாக ஓர் உருக்கமான வேண்டுகோள்...* போதையின் பாதையில் யாரும் போகக்கூடாது என மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.* போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும். போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கிட ஒன்றிணைவோம்" என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.