
சென்னை,
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. 36 வருடங்களுக்கு பிறகு இவர்களது கூட்டணி இணைந்துள்ளதாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இதில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கிடையில் நேற்று மாலை இப்படத்தின் டிரெய்லர் வெளியானது.
இந்த நிலையில், தக் லைப் படத்தின் டிரெய்லரை பார்த்த இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து எக்ஸ் தளத்தில் டிரெய்லர் குறித்து தனது ரியாக்ஷனை பதிவிட்டுள்ளார். அதில் நடிகர்கள் சிம்பு, அசோக் செல்வன், கமல்ஹாசன் ஆகியோரை பாராட்டியுள்ளார். இதற்கிடையில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து சிம்புவின் 'எஸ்.டி.ஆர் 51' படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.