போதைப்பொருள் தடுப்பில் முன்னுதாரணமாக விளங்கும் ஹரியானா அரசு: கிராமங்களில் 42% பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாடு தவிர்ப்பு

4 weeks ago 6

ஹரியானா: ஹரியானாவில் உள்ள கிராமங்களில் 42% பகுதிகளில் போதைப்பொருள் ஒழிக்கப்பட்டு இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 2021ம் ஆண்டு முதல் புகையிலை உள்ளிட்ட போதைப்பொருள்கள் பயன்பாட்டை தடுக்க ஹரியானா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புகையிலை, குட்கா பொருட்களுக்கு 2021ம் ஆண்டு அம்மாநில அரசு தடை விதித்தது. அந்த காலகட்டம் தொடங்கி தற்போது வரை போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க அம்மாநில அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.

முதலில் போதைப்பொருள் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது. போதைப்பொருள் விற்றால் தடுக்கப்படும் கடும் நடவடிக்கை குறித்து மக்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது. ஊர் பெரியவர்கள் மூலமாக இத்தகைய விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டன. திருமண விழாக்களில் மது விருந்து வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதனை கிராம மக்கள் பின்பற்றவும் செய்தனர். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் ஹரியானா காவல் துறையினர் சில்லறை வியாபாரிகளை குறிவைப்பதை விட்டுவிட்டு போதைப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ள பெரிய பெரிய குடோன்களை குறிவைத்து சோதனை நடத்தினர்.

அம்பலா, குருஷேத்ரா, குருகிராம், ஃபரிதாபாத் ஆகிய இடங்களில் புகையிலை, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிகளவு பறிமுதல் செய்யப்பட்டன. போதைப்பொருள் விற்பனையாளர்களின் வியாபார சங்கிலியை காவல்துறையினர் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தனர். இதற்கெல்லாம் மேலாக இளைஞர்களின் கவனம் விளையாட்டின் பக்கம் திருப்பி விடப்பட்டது. உடல் உறுதியில் கவனம் செலுத்திய இளைஞர்கள் போதைப்பொருள் பயன்பாட்டை தவிர்க்கின்றனர். ஹரியானாவில் உள்ள 77, 536 கிராமங்களில் 42% பகுதிகளில் போதைப்பொருட்கள் ஐயப்பாடு தடுக்கப்பட்டு இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

The post போதைப்பொருள் தடுப்பில் முன்னுதாரணமாக விளங்கும் ஹரியானா அரசு: கிராமங்களில் 42% பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாடு தவிர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article