
புதுடெல்லி,
போதை பொருள் நடமாட்டத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைககள் கடுமையாக எடுக்கப்படும் என்று உள்துறை மந்திரி அமித் ஷா உறுதியுடன் கூறி இருந்தார். போதை பொருள் இல்லாத இந்தியா கட்டமைக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில்,மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முழு பலத்துடன் போதைப்பொருள் கும்பல்களை ஒழித்து வருகிறது. போதைப்பொருள் இல்லாத பாரத்த்தை உருவாக்கும் அரசின் நடவடிக்கைகளில் அசாமில் ரூ.24.32 கோடி மதிப்புள்ள 30.4 கிலோ மெத்தமெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருட்களுக்கு எதிரான எங்கள் நடவடிக்கைகள் தொடரும். இந்த பெரிய நவடிக்கை எடுத்து என்.சி.பி, அசாம் காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எப் க்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.