திண்டுக்கல், பிப். 15: பொதுமக்களுக்கு போதை பொருள் பயன்பாடு தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தமிழக அரசால் ‘DRUG FREE TN’ என்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. போதை பொருட்கள், பான், குட்கா, கஞ்சா, சட்ட விரோத சாராயம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வோர், பயன்படுத்துவோர் குறித்த தகவல்கள் தெரியும் பட்சத்தில் செயலியில் அதன் தகவல்களையும், புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்தால், உடனடியாக சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் போதை பொருட்களின் பயன்பாடு தடுத்து நிறுத்தப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
The post போதை பொருள் தடுக்க புதிய செயலி அறிமுகம் appeared first on Dinakaran.