போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் ஜாமீன் கோரி மனு தாக்கல்: அமலாக்கத் துறை பதில்தர சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

2 hours ago 1

சென்னை: போதை பொருள் கடத்தல் செய்ததாக மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரால் கடந்த மார்ச் மாதம் சென்னையை சேர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி ஜாபர்சாதிக், அவருடன் தொடர்பில் இருந்த திரைப்பட இயக்குனர் அமீர் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, சகோதரர் முகமது சலீம், திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது.

இந்த வழக்கில், ஜாபர்சாதிக், இயக்குனர் அமீர் உள்ளிட்ட 12 பேர் மீது அமலாக்கத்துறை 302 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வரும் ஜாபர் சாதிக், அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் தரப்பில் ஜாமீன் கோரி கூடுதல் சி.பி.ஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எழில்வேலவன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்தார்.

 

The post போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் ஜாமீன் கோரி மனு தாக்கல்: அமலாக்கத் துறை பதில்தர சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article