போக்சோவில் கைதாக காரணம் என்பதால் ஆத்திரம் தண்ணீரில் அமுக்கி பெண் கொடூரக்கொலை

3 months ago 18

*ஜாமீனில் வந்தவர் கைது

வேதாரண்யம் : போக்சோவில் கைதாக காரணமான பெண் குளிக்கும் போது தண்ணீரில் அமுக்கி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜாமீனில் வெளியே வந்தவர் கைது செய்யப்பட்டார்.நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி வடக்கு செட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி கலைமகள் (43). இவர் தனது வீட்டுக்கு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான குட்டையில் கடந்த 9ம்தேதி காலை குளிக்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

அவரை தேடிச் சென்றபோது கலைமகள், குட்டைக்குள் சடலமாக கிடந்தது தெரிந்தது. இது குறித்து புகாரின் போரில் வேதாரண்யம் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பின்பு கலைமகளின் உடலை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடைய கலை மகளின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த சண்முகநாதன் (43) என்பவர் கடந்த 10ம் தேதி தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

விசாரணையில் கலைமகளின் உறவினரான 11 வயது சிறுமியிடம் சண்முகநாதன் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார். இது தொடர்பாக அவர் மீது கடந்த மே மாதம் 13ம் தேதி வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த கைது செய்யப்பட்டார். பின்னர் சண்முகநாதன் அண்மையில் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

தன் மீது புகார் கொடுத்த கலைமகளை பழிவாங்கும் நோக்கத்தோடு அவர் குளிக்கும்போது சண்முகநாதன் அவரை தண்ணீரில் அமுக்கி கொலை செய்திருப்பதாக தெரியவந்தது. அதையடுத்து போலீசார் சந்தேக மரணம் வழக்கை கொலை வழக்கமாக மாற்றி நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சண்முகநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post போக்சோவில் கைதாக காரணம் என்பதால் ஆத்திரம் தண்ணீரில் அமுக்கி பெண் கொடூரக்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article