போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

3 months ago 20

ஜெய்ப்பூர்: போக்குவரத்து விதிகளை மீறி காரில் பயணம் செய்த புகாரின் பேரில் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ.7,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பஜன் லால் சர்மா தலைமையிலான பாஜ ஆட்சி செய்கிறது. பிரேம் சந்த் பைரவா ராஜஸ்தான் துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார். கடந்த வாரம் சமூக வலைதளங்களில் பரவிய ஒரு வீடியோ பிரேம் சந்த் பைரவாவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. அதில் பிரேம் சந்த் பைரவாவின் மகன் ஆஷூ பைரவா திறந்த ஜீப் ஒன்றில் தன் நண்பர்களுடன் செல்கிறார். அவருடன் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் புஷ்பேந்திர பரத்வாஜின் மகன் கார்த்திகேயா மற்றும் சில அரசியல்வாதிகளின் மகன்கள் இருந்தனர்.

அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியபடி ராஜஸ்தான் காவல்துறையினர் செல்லும் காட்சி அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறி கார் ஓட்டிய ஆஷூ பைரவாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் போக்குவரத்துதுறை வௌியிட்ட அறிவிப்பில், “அனுமதியின் வாகனத்தை மாற்றியமைத்ததற்கு ரூ.5,000, சீட் பெல்ட் அணியாத குற்றத்துக்கு ரூ.1,000 மற்றும் வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசி கொண்டு சென்றதற்காக ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம் appeared first on Dinakaran.

Read Entire Article