பொள்ளாச்சியில் தனியார் தொழிற்சாலை சுற்றுச்சுவர் இடிந்து 2 தொழிலாளர்கள் பலி

2 days ago 1

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் கட்டுமான தொழிலாளர்கள் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அந்த இடிபாட்டில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரும் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு பொள்ளாச்சி ஏ.எஸ்.பி. நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article