
சென்னை,
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற பெயரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கட்சி தொடங்கியதை எதிர்த்து வழக்கு தொடர உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று த.வெ.க. கொடியில் யானை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று நடந்த நிலையில், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தொடங்கிய கட்சியின் கொடியிலும் யானை படம் இருப்பதாக த.வெ.க. சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதற்கு எதிராகவும் வழக்கு தொடரப்படும் என பகுஜன் சமாஜ் தரப்பு பதில் அளித்தது. இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.