சென்னை: பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, தேசிய மாதிரி ஆய்வு 80வது சுற்று “சுகாதாரம் குறித்த ஆய்விற்கான கணினி உதவியுடன் கூடிய நேர்க்காணல் “முறையில் தரவுகளைச் சேகரிக்கும் பயிற்சி வகுப்பு மாநில அளவில் அண்ணா நிர்வாகப் பணியாளர் கூட்ட அரங்கில் 13ம் தேதி நடந்தது. பயிற்சி வகுப்பை முதன்மைச் செயலர் ஆணையர் ஜெயா தொடங்கி வைத்தார்.
துறைத் தலைமையிடத்திலிருந்து கூடுதல் இயக்குநர் இளஞ்செழியன் மற்றும் புள்ளியியல் இணை இயக்குநர்கள் சுரேஷ் மற்றும் ரவி (ம) இதரஅலுவலர்கள் பயிற்சியில் பங்கேற்றனர். தேசியப் புள்ளியியல் அலுவலகம், சென்னை மண்டலத்திலிருந்து மனோகர் மற்றும் சந்திரசேகர், துணை இயக்குநர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும், மூத்த புள்ளியியல் அலுவலர்களான யூசுப் மற்றும் சுக்கா கிருஷ்ணா ஆகியோர் புள்ளியியல் துறையைச் சேர்ந்த அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
The post பொருளியல், புள்ளியியல் துறை சார்பில் சுகாதாரம் குறித்த ஆய்விற்கான கணினி உதவியுடன் நேர்காணல் appeared first on Dinakaran.