தேவையான பொருட்கள்
அரிசி -1 டம்ளர்.
தண்ணீர்-2 கப்.
உப்பு-சிறிதளவு.
நாட்டுச்சர்க்கரை-1கப்.
ஏலக்காய் பொடி-2 தேக்கரண்டி.
துருவிய தேங்காய்-தேவையான அளவு.
செய்முறை:
முதலில் கடாயில் 1 டம்ளர் அரிசியை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து அதை மிக்ஸியில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.இப்போது ஒரு கடாயில் 2 கப் தண்ணீர் விட்டு, சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் நன்றாக கொதித்ததும் அரைத்து வைத்திருக்கும் அரிசி மவை சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும். இப்போது இதில் ஏலக்காய் பொடி 2 தேக்கரண்டி, நாட்டு சர்க்கரை 1 கப் சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும்.இப்போது இது ஆறியதும் உருண்டைகள் உருட்டி துருவிய தேங்காயில் இந்த உருண்டைகளை போட்டு பிரட்டி எடுத்தால் அல்டிமேட் சுவையில் பொரி அரிசி உருண்டை தயார்.
The post பொரியரிசி உருண்டை appeared first on Dinakaran.