
நீலகிரி,
நீலகிரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
திமுக ஆட்சிக்கு வந்ததும் பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என 2019 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின்போதே நான் பேசியிருந்தேன். எப்படிப்பட்ட பொறுப்பில் இருந்தாலும் சரி... எவ்வளவு பெரிய செல்வாக்கு பெற்றிருந்தாலும் சரி.. நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று சொன்னேன்.. அதுதான் இப்போது நடந்திருக்கிறது. இதுதொடர்பாக நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரிலும் பொள்ளாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்டி என நான் கூறினேன்.. கோடநாடு கொலை கொள்ளை வழக்கிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய தண்டனை வழங்கப்படும்.
அதிமுக ஆட்சியில் விளையாட்டுதுறை அமைச்சர் யார் என்பதே தெரியாத நிலைதான் இருந்தது. ஆனால், தற்போது வெளிநாட்டு வீரர்கள் இங்கே வந்து கலந்துகொள்ளும் அளவுக்கு விளையாட்டு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் யார்? என்று கேட்டால் தெரியாது, ஆனால் இப்போது யார்? என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.Edappadi Palaniswami's job is to tell lies and nonsense: M.K. Stalin
மத்திய மந்திரி அமித்ஷாவை எதற்காக எடப்பாடி பழனிசாமி சந்தித்தார் என்பது நாட்டுக்கே தெரியும். ஆனால், தான் சொல்லித்தான் மெட்ரோ, 100 நாள் வேலை ஆகிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதாக கூறி வருகிறார். இந்த மாதிரி மோசமான பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் அவரின் வேலையாக இருக்கிறது. இதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.